எனக்கு தெரிந்த வரை.என்னுடைய அணைத்து நண்பர்களுக்கும் "தமிழ் படம்" அடுத்து பார்க்க வேண்டிய படம் என்று குறித்து வைத்த படம் ... மிகுந்த எதிர்பார்ப்புகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சரா சரி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறை, பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் புஷ்பாஞ்சலி திரைஅரங்கில் பார்த்தேன். எனக்கு விவரம் தெரிந்து, அரங்கு நன்றாக மாறிவிட்டது, மாடி வகுப்பில் பார்ப்பது வீண் என்ற காலம் போய் இப்பொழுது நன்றாக புனரமைத்து விட்டார்கள்..
படம் ஆரம்பிக்கும் பொழுது எழுத்து போடும் பொழுதே எண்பதுகளில் வந்து கொண்டிருந்த முறைகளில், மற்றும் ஐம்பதுகளில் மற்றும் அறுபதுகளில் வந்த அட்டை முறையை காட்டுகின்றனர். மெலிதாக நமது எதிர்பார்ப்பை கூட்டுகிறது. கதை என்ற ஒன்று இருந்தால் தானே கோர்வை , ஓட்டை போன்ற பிரச்சனைகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் என்று நினைக்கிறன். அதை மருந்துக்கும் தொட வில்லை. முழு மூச்சுடன் தற்கால தமிழ் படத்தின் அபத்தங்களை கிண்டலடிகின்றார் இயக்குனர். முதல் காட்சியிலேயே இளம் நடிகர்களின் மறைமுக முதல்வர் /ஆட்சி என்ற லட்சியங்களை சாடுகிறார். கதாநாயகர்களின் அறிமுக பாடல்கள், அறிவுக்கு எட்டாத ககதாநாயக வழிபாடு, பூமி அதிர செய்யும் சண்டை காட்சிகள், இம்மியளவும் சட்டை செய்யப்படாத திரைக்கதைகள், நரம்பு புடைப்பது முதல்கொண்டு ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.
இவ்வளவு இருந்தும் விஜய் தொலைகாட்சியில் லொள்ளு சபா பார்க்கும் உணர்வு படம் பார்க்கும் எவருக்கும் வரும். கதை திரைக்கதை என்று எதையும் எதிர்பார்க்காமல் படம் முழுதும், நகைச்சுவை நிரம்பி வழிகிறது. எனக்கு தெரிந்த வரையில் இந்த அளவிற்கு அரங்கமே அதிர்ந்து சிரித்து நான் பார்த்ததே இல்லை. அந்த மட்டில் இயக்குனர் அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். நேரடியாக பழைய படங்களின் காட்சி அமைப்புகளை சாடும் பொழுது சலிப்பு தட்டுகிறது. ( உ.: கஜினி, நாயகன்,ரன், தளபதி)கதை இல்லாமல அவ்வப்பொழுது படம் தள்ளாடுகிறது, பின் பாதியில் சினிமா பட்டி, தங்கச்சி பட்டி என்று இயக்குனர் பொறுமையை சோதிக்கிறார். சென்னை சிவா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். திஷா பாண்டே வுக்கு வழக்கமான தமிழ் பட நாயகியின் முக்கியத்துவமே, பெரிதாக சோபிக்க சந்தர்பம் இல்லை,வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், பெரும்பாலான இடங்களில் படம் தள்ளாடுகிறது. வலுவான கதயமைப்பை கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
கிரி, இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு மிக சமீபத்தில் தான் வாய்த்தது ( நன்றி - தமிழ்தண்டர்.காம்). வழக்கமான தமிழ் படம் போலவே இவர்களும் இரண்டாம் பாதியில் உட்காரவே முடியாத அளவுக்கு கொடுமைப் படுத்திவிட்டனர்.
Post a Comment