Sunday, January 31, 2010

தமிழ் படம் திரை விமர்சனம் / tamil padam movie review

எனக்கு தெரிந்த வரை.என்னுடைய அணைத்து நண்பர்களுக்கும் "தமிழ் படம்" அடுத்து பார்க்க வேண்டிய படம் என்று குறித்து வைத்த படம் ... மிகுந்த எதிர்பார்ப்புகள் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு சரா சரி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த முறை, பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் புஷ்பாஞ்சலி திரைஅரங்கில் பார்த்தேன். எனக்கு விவரம் தெரிந்து, அரங்கு நன்றாக மாறிவிட்டது, மாடி வகுப்பில் பார்ப்பது வீண் என்ற காலம் போய் இப்பொழுது நன்றாக புனரமைத்து விட்டார்கள்..


படம் ஆரம்பிக்கும் பொழுது எழுத்து போடும் பொழுதே எண்பதுகளில் வந்து கொண்டிருந்த முறைகளில், மற்றும் ஐம்பதுகளில் மற்றும் அறுபதுகளில் வந்த அட்டை முறையை காட்டுகின்றனர். மெலிதாக நமது எதிர்பார்ப்பை கூட்டுகிறது. கதை என்ற ஒன்று இருந்தால் தானே கோர்வை , ஓட்டை போன்ற பிரச்சனைகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் என்று நினைக்கிறன். அதை மருந்துக்கும் தொட வில்லை. முழு மூச்சுடன் தற்கால தமிழ் படத்தின் அபத்தங்களை கிண்டலடிகின்றார் இயக்குனர். முதல் காட்சியிலேயே இளம் நடிகர்களின் மறைமுக முதல்வர் /ஆட்சி என்ற லட்சியங்களை சாடுகிறார். கதாநாயகர்களின் அறிமுக பாடல்கள், அறிவுக்கு எட்டாத ககதாநாயக வழிபாடு, பூமி அதிர செய்யும் சண்டை காட்சிகள், இம்மியளவும் சட்டை செய்யப்படாத திரைக்கதைகள், நரம்பு புடைப்பது முதல்கொண்டு ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

இவ்வளவு இருந்தும் விஜய் தொலைகாட்சியில் லொள்ளு சபா பார்க்கும் உணர்வு படம் பார்க்கும் எவருக்கும் வரும். கதை திரைக்கதை என்று எதையும் எதிர்பார்க்காமல் படம் முழுதும், நகைச்சுவை நிரம்பி வழிகிறது. எனக்கு தெரிந்த வரையில் இந்த அளவிற்கு அரங்கமே அதிர்ந்து சிரித்து நான் பார்த்ததே இல்லை. அந்த மட்டில் இயக்குனர் அனைவரின் பாராட்டையும் பெறுகிறார். நேரடியாக பழைய படங்களின் காட்சி அமைப்புகளை சாடும் பொழுது சலிப்பு தட்டுகிறது. ( உ.: கஜினி, நாயகன்,ரன், தளபதி)கதை இல்லாமல அவ்வப்பொழுது படம் தள்ளாடுகிறது, பின் பாதியில் சினிமா பட்டி, தங்கச்சி பட்டி என்று இயக்குனர் பொறுமையை சோதிக்கிறார். சென்னை சிவா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். திஷா பாண்டே வுக்கு வழக்கமான தமிழ் பட நாயகியின் முக்கியத்துவமே, பெரிதாக சோபிக்க சந்தர்பம் இல்லை,வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், பெரும்பாலான இடங்களில் படம் தள்ளாடுகிறது. வலுவான கதயமைப்பை கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

Friday, January 15, 2010

ஆயிரத்தில் ஒருவன் திரை விமர்சனம் / ayirathil oruvan movie review

மிகுந்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் நேற்று மதுரை மாணிக்க விநாயகர் திரையரங்கில் பார்க்க நேர்ந்தது.. இயக்குனரின் நேர்த்தியான பாணியை எதிர்நோக்கியதற்கு மிஞ்சியது ஏமாற்றமே.

தமிழ் வரலாற்றில் புகழ் வாய்ந்த சோழர் குல வம்சத்தின் தேடலை மையமாக கொண்டு கதை பின்னப்பட்டுள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் கதை தொடங்குகிறது, கடைசி மன்னர் போரிடுவதும், ஒரு சோழ இளவரசர் மட்டும் கண் காணாத தேசத்திற்கு தப்புகிறார். பின்பு சமகால தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தப்பிய சோழ இளவரசரின் பாதையை பின் பற்றி சோழ வம்சம் எஞ்சிஉள்ளதா என்று ஆராய முற்படுகின்றனர். கதை முழுக்க முழுக்க கற்பனையே என்று முதலிலேயே கூறபடுகிறது,

இரகசிய சோழ வரலாறை தேடி காணமல் போன தன் தந்தையை தேடி லாவண்யா (ஆண்ட்ரியா ) புதிய ஆராய்சி குழுவில் சேர்கிறார். அரசு சார்பாக குழுவை அனிதா( ரீமா) மற்றும் ரவி (அழகம் பெருமாள்) வழி நடத்துகின்றனர். இவரகளுக்கு எடுபிடி ஆளாக சென்னை துறைமுகத்தில் கார்த்தி மற்றும் அவரது சகாக்கள் சேர்கின்றனர். சென்னை துறைமுகத்தில் இருந்து இவரகளது பயணம் தொடங்குகிறது..

இவ்வளவு பலத்த பின் புலத்தை உடைய கதையை மிகவும் சுவாரசியமாய் நகர்த்துவார் இயக்குனர் என்று எதிர்பார்த்தால் , பெருத்த ஏமாற்றம். குழுவினரின் பயணம் அந்த கால அம்புலி மாமா புத்தகங்களில் வரும் மர்ம பேய்கள், பிசாசுகள் மற்றும் ஆதிவாசிகள் என்று உப்பு சப்பில்லாமல் நகர்கிறது. குழுவினர் தேடி போகும் கனவு நகரம் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப் பட்டிருகிறது அவதார் பார்த்து விட்டு இதை பார்ப்பவர்களுக்கு பரிதாபத்தை வரவழைகும். ஆண்ட்ரியா ரீமா மற்றும் கார்த்தி யின் கூட்டணி முதல் பாதியில் வலு சேர்க்கிறது. கதையோடு ஒன்றி வரும் ஒரு சில நகைசுவைகள் அழகு சேர்க்கிறது. தனித்து நிற்பது கார்த்தியின் யதார்த்த நடிப்பே. கவர்ச்சி என்ற பேரில், இயக்குனர் ஆபாசத்தின் எல்லையைதொட்டிறிக்கிறார் . பல இடத்தில நெளியாமல் இருக்க முடியாது. சடாரென ஆயுதம் தாங்கிய ராணுவம், சரமாரியான துப்பாக்கி சூடு.என்று திரைகதையில் பெருத்த ஓட்டைகள்.


இரண்டாம் பாதியில் கார்த்தி மற்றும் லாவண்யா, அனிதா தப்பிய சோழ சாம்ராஜயத்தை அடைகின்றனர். 1000 வருடங்களாக சோழ சாம்ராஜ்யம் நடந்து வருகிறது. ஒரு நாள் தஞ்சை திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் தங்கள் அரசனை நம்பி வாழ்கின்றனர். இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியா என்று மனதில் ஒட்ட மறுக்கிறது திரைக்கதை சில இடங்களில் ரசிகர்களை குழப்பமடைய செய்கிறது. கதையில் திருப்பமாக அனிதா ( ரீமா) பாண்டிய இலவரசியகவும், தங்கள் குல தெய்வமான ஒரு சிலையை ( மீனாக்ஷி அம்மன் சிலையை ஒத்திருக்கிறது) மீட்க வந்துள்ளதாகவும் விவரிக்கிறார். திடீரென்று சோழர் கால தமிழ் பேசுகிறார். சோழ அரசரை ( பார்த்திபன்) தன் வசீகரத்தால் வீழ்த்தி ( முழு விரசம், மற்றும் முகம் சுளிக்க செய்யும் காட்சி அமைப்புகள் ) சிலையை மீட்கிறார். இதகிடையில் கார்த்தி சோழ இளவரசராக அறிவிக்கபடுகிறார் ( Gladiator படத்தின் சண்டைகாட்சி அப்பட்டமாக காப்பியடித்து..பரிதாபமாக தோற்கிறார் இயக்குனர்)

சோழ குலத்துக்கும் சமகால ராணுவத்துக்கும் போர் நடக்கிறது. கடைசியில் சோழ குளம் என்ன ஆனது என்பது முடிவு. போர் காட்சிகள் அபத்தம். கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க காது வலிக்கிறது . டயலாக் வராதா என்று மனம் ஏங்க ஆரம்பிகிறது. பிரகாஷின் இசையில் உம மேல ஆச தான் பாடு ஹம் பண்ண வைக்கிறது. கார்த்தியின் நடிப்பு மட்டும் படத்தில் தனித்து நிற்கிறது . படம் முடிந்து பின்னும் அலறல்சத்தம் மற்றும் சலிப்பு நிற்க மறுக்கிறது... :(